×

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன் உள்பட 3 பேரும் குடும்பத்துடன் வாழ நடவடிக்கை: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கை தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் கடந்த 2022, நவ.11ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் சாந்தன் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.

தற்போது சிறப்பு முகாமில் இருப்பவர்கள் நோக்கம் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதுதான். முகாமில் தங்கவைப்பதற்கு முன்பு கூட, எந்த நாட்டிற்கு செல்ல போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபோது, ‘இலங்கை சென்றால் ஆபத்து, அதனால் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தனர். எனவே, அரசு பரிசீலித்து, ஜெயகுமார், ராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, வெளியுறவு துறையையும், தமிழக முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.

The post திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன் உள்பட 3 பேரும் குடும்பத்துடன் வாழ நடவடிக்கை: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Trichy Special Camp ,Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Robert Payas ,Jayakumar ,Santhan ,Rajiv ,Tamil Nadu ,
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...